Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Muzzammil — Ayah 20

۞ إِنَّ رَبَّكَ يَعۡلَمُ أَنَّكَ تَقُومُ أَدۡنَىٰ مِن ثُلُثَيِ ٱلَّيۡلِ وَنِصۡفَهُۥ وَثُلُثَهُۥ وَطَآئِفَةٞ مِّنَ ٱلَّذِينَ مَعَكَۚ وَٱللَّهُ يُقَدِّرُ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَۚ عَلِمَ أَن لَّن تُحۡصُوهُ فَتَابَ عَلَيۡكُمۡۖ فَٱقۡرَءُواْ مَا تَيَسَّرَ مِنَ ٱلۡقُرۡءَانِۚ عَلِمَ أَن سَيَكُونُ مِنكُم مَّرۡضَىٰ وَءَاخَرُونَ يَضۡرِبُونَ فِي ٱلۡأَرۡضِ يَبۡتَغُونَ مِن فَضۡلِ ٱللَّهِ وَءَاخَرُونَ يُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱللَّهِۖ فَٱقۡرَءُواْ مَا تَيَسَّرَ مِنۡهُۚ وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَأَقۡرِضُواْ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗاۚ وَمَا تُقَدِّمُواْ لِأَنفُسِكُم مِّنۡ خَيۡرٖ تَجِدُوهُ عِندَ ٱللَّهِ هُوَ خَيۡرٗا وَأَعۡظَمَ أَجۡرٗاۚ وَٱسۡتَغۡفِرُواْ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمُۢ ٢٠
தூதரே! -நீர் சில சமயங்களில் இரவில் மூன்றில் ஒரு பகுதிக்குக் குறைவாக தொழுகின்றீர் என்பதையும் சில சமயங்களில் பாதி இரவு வரையும் சில சமயங்களில் மூன்றில் ஒரு பகுதி நேரம் வரையிலும் தொழுகின்றீர் என்பதையும் உம்முடன் நம்பிக்கையாளர்களில் ஒரு பிரிவினரும் தொழுகிறார்கள் என்பதையும் உம் இறைவன் நன்கு அறிவான். அல்லாஹ்வே இரவையும் பகலையும் நிர்ணயிக்கிறான். அவ்விரண்டின் நேரங்களையும் அவனே வரையறை செய்கிறான். நீங்கள் அதன் நேரங்களைக் கணக்கிடவோ, கட்டுப்படுத்தவோ முடியாது என்பதை அவன் அறிவான். அதில் வேண்டப்பட்டதை தேடி அதிக நேரம் நின்று வணங்குவது உங்களுக்குச் சிரமமானது. எனவே அல்லாஹ் உங்களை மன்னித்துவிட்டான். அதனால் இரவில் உங்களால் இயன்ற அளவு தொழுதுகொள்ளுங்கள். -நம்பிக்கையாளர்களே!- உங்களில் நோயால் கஷ்டப்படக்கூடிய நோயாளிகளும் வாழ்வாதாரம் தேடி அல்லாஹ்வின் பாதையில் பயணம் செய்யக்கூடியவர்களும் அல்லாஹ்வின் திருப்தியை நாடி அவனுடைய வாக்கை மேலோங்கச் செய்வதற்காக அவனது பாதையில் போரிடக்கூடியவர்களும் உள்ளார்கள் என்பதை அல்லாஹ் அறிவான். இவர்கள் இரவில் நின்று வணங்குவது சிரமமானதாகும். எனவே உங்களால் இயன்ற அளவு இரவில் தொழுது கொள்ளுங்கள். கடமையாக்கப்பட்ட தொழுகைகளை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுங்கள். உங்கள் செல்வங்களிலிருந்து ஸகாத்தை வழங்குங்கள். அல்லாஹ்வின் பாதையில் உங்கள் செல்வங்களைச் செலவு செய்யுங்கள். நீங்கள் உங்களுக்காக சேர்த்துவைத்த எந்த நன்மையானாலும் அதைவிட சிறந்த கூலியைப் பெறுவீர்கள். அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.