Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Muddaththir — Ayah 31

وَمَا جَعَلۡنَآ أَصۡحَٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَٰٓئِكَةٗۖ وَمَا جَعَلۡنَا عِدَّتَهُمۡ إِلَّا فِتۡنَةٗ لِّلَّذِينَ كَفَرُواْ لِيَسۡتَيۡقِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَيَزۡدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِيمَٰنٗا وَلَا يَرۡتَابَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَٱلۡمُؤۡمِنُونَ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ وَٱلۡكَٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلٗاۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۚ وَمَا يَعۡلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَۚ وَمَا هِيَ إِلَّا ذِكۡرَىٰ لِلۡبَشَرِ ٣١
நாம் வானவர்களையே நரகத்தின் காவலாளிகளாக ஆக்கியுள்ளோம். மனிதர்களுக்கு அவர்களை எதிர்க்கும் சக்தி கிடையாது. நாம் அல்லாஹ்வை நிராகரித்தவர்களுக்கு அவர்களின் இந்த எண்ணிக்கையை சோதனையாகவே ஆக்கியுள்ளோம். இது அவர்கள் கூறுவதை கூற வேண்டும். இதனால் அவர்களின் வேதனை பலமடங்கு அதிகமாக வேண்டும் என்பதற்காகவும், தவ்ராத் வழங்கப்பட்ட யூதர்களும் இன்ஜீல் வழங்கப்பட்ட கிறிஸ்தவர்களும் குர்ஆன் அவர்களின் வேதங்களை உண்மைப்படுத்தக்கூடியதாக இறங்கியது என்பதை உறுதியாக அறிந்துகொள்வதற்காகவும், வேதக்காரர்கள் தம்முடன் உடன்படும் போது நம்பிக்கையாளர்களின் நம்பிக்கை அதிகரிப்பதற்காவும், யூதர்களும் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் சந்தேகம் கொள்ளக்கூடாது என்பதற்காவும், நம்பிக்கையில் தடுமாற்றம் உள்ளவர்களும் நிராகரிப்பாளர்களும் “இந்த விசித்திரமான எண்ணிக்கையின் மூலம் அல்லாஹ் என்னதான் நாடுகின்றான்?” என்று கூறுவதற்காகவும்தான். இவ்வாறு இந்த எண்ணிக்கையை நிராகரித்தவனை அல்லாஹ் வழிகெடுத்து அதனை நம்பிக்கை கொண்டவர்களுக்கு நேர்வழியளித்தது போன்று அல்லாஹ் யாரை வழிகெடுக்க நாடுகிறானோ அவரை வழிகெடுக்கிறான், யாருக்கு வழிகாட்ட நாடுகிறானோ அவருக்கு வழிகாட்டுகிறான். உம் இறைவனின் பெரும் படைகளை அவன் மட்டுமே அறிவான். நரகம் மனிதர்களுக்கான நினைவூட்டலேயாகும். அதன் மூலம் அவர்கள் அல்லாஹ்வின் மகத்துவத்தை அறிந்துகொள்வார்கள்.