Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah An-Naml — Ayah 14

وَجَحَدُواْ بِهَا وَٱسۡتَيۡقَنَتۡهَآ أَنفُسُهُمۡ ظُلۡمٗا وَعُلُوّٗاۚ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُفۡسِدِينَ ١٤
அவர்கள் அநியாயம் செய்ததனாலும் சத்தியத்தை ஏற்காமல் கர்வம் கொண்டதனாலும் இந்த அத்தாட்சிகள் அல்லாஹ்விடமிருந்து வந்தவையே என்பதை அவர்களது உள்ளங்கள் உறுதியாக அறிந்திருந்தும், அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தார்கள். -தூதரே!- நிராகரிப்பினாலும் பாவங்களினாலும் பூமியில் குழப்பம் செய்த நிராகரிப்பாளர்களின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக. நாம் அவர்கள் அனைவரையும் அடியோடு அழித்து நிர்மூலமாக்கி விட்டோம்.