Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah An-Naml — Ayah 16

وَوَرِثَ سُلَيۡمَٰنُ دَاوُۥدَۖ وَقَالَ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ عُلِّمۡنَا مَنطِقَ ٱلطَّيۡرِ وَأُوتِينَا مِن كُلِّ شَيۡءٍۖ إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡفَضۡلُ ٱلۡمُبِينُ ١٦
சுலைமான் தூதுத்துவம், ஞானம், ஆட்சியதிகாரம் ஆகியவற்றில் தம் தந்தை தாவூதுக்கு வாரிசானார். அவர் தம்மீதும் தம் தந்தையின் மீதும் அல்லாஹ் பொழிந்த அருட்கொடைகளை எடுத்துரைத்தவராகக் கூறினார்: “மக்களே! அல்லாஹ் எங்களுக்குப் பறவைகளின் சத்தங்களை புரிவதைக் கற்றுத் தந்துள்ளான். தூதர்களுக்கும் அரசர்களுக்கும் அளித்த அனைத்தையும் அவன் எங்களுக்கு வழங்கியுள்ளான். நிச்சயமாக அல்லாஹ் எங்களுக்கு வழங்கிய இவைகளே தெட்டத் தெளிவான அருளாகும்.”