Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah An-Naml — Ayah 24

وَجَدتُّهَا وَقَوۡمَهَا يَسۡجُدُونَ لِلشَّمۡسِ مِن دُونِ ٱللَّهِ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيۡطَٰنُ أَعۡمَٰلَهُمۡ فَصَدَّهُمۡ عَنِ ٱلسَّبِيلِ فَهُمۡ لَا يَهۡتَدُونَ ٢٤
அந்தப் பெண்ணும் அவளது சமூகமும் அல்லாஹ்வைவிடுத்து சூரியனுக்குச் சிரம்பணிவதைக் கண்டேன். அவர்கள் செய்யும் இணைவைப்பான காரியங்களையும் பாவங்களையும் ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டியுள்ளான். அவன் அவர்களை சத்தியப் பாதையைவிட்டும் திருப்பிவிட்டான். எனவே அவர்கள் நேரான வழியை அடைமுடியவில்லை.