Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah An-Naml — Ayah 34

قَالَتۡ إِنَّ ٱلۡمُلُوكَ إِذَا دَخَلُواْ قَرۡيَةً أَفۡسَدُوهَا وَجَعَلُوٓاْ أَعِزَّةَ أَهۡلِهَآ أَذِلَّةٗۚ وَكَذَٰلِكَ يَفۡعَلُونَ ٣٤
அரசி கூறினாள்: “நிச்சயமாக அரசர்கள் ஓர் ஊரில் நுழைந்தால் கொலை மற்றும் கொள்ளையின் மூலம் அதனை நாசமாக்கிவிடுவார்கள். அந்த ஊரின் கண்ணியவான்களையும் தலைவர்களையும் இழிவானவர்களாக ஆக்கிவிடுகிறார்கள். அரசர்கள் ஓர் ஊரை வெற்றி கொண்டால் அவர்களின் உள்ளங்களில் மரியாதையையும் பயத்தையும் விதைப்பதற்காக எப்போதும் இவ்வாறுதான் செய்வார்கள்.