Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah An-Naml — Ayah 44

قِيلَ لَهَا ٱدۡخُلِي ٱلصَّرۡحَۖ فَلَمَّا رَأَتۡهُ حَسِبَتۡهُ لُجَّةٗ وَكَشَفَتۡ عَن سَاقَيۡهَاۚ قَالَ إِنَّهُۥ صَرۡحٞ مُّمَرَّدٞ مِّن قَوَارِيرَۗ قَالَتۡ رَبِّ إِنِّي ظَلَمۡتُ نَفۡسِي وَأَسۡلَمۡتُ مَعَ سُلَيۡمَٰنَ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ٤٤
‘மாளிகையினுள் நுழையும்’ என்று அவளிடம் கூறப்பட்டது. அதனைக் கண்ட அவள் அதனை நீர்த்தடாகம் என்று எண்ணி அதில் நனைந்து விடும் என்று தன் ஆடையை கெண்டைக் கால்களுக்கு மேல் உயர்த்திவிட்டாள். சுலைமான் அவளிடம், “நிச்சயமாக இது கண்ணாடி மாளிகையாகும்’ என்று கூறினார். அவளை இஸ்லாத்தின்பால் அழைத்தார். அவருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டவளாக அவள் கூறினாள்: “என் இறைவா! உன்னுடன் மற்றவர்களையும் வணங்கி நிச்சயமாக எனக்கு நானே அநீதி இழைத்துக் கொண்டேன். சுலைமானும் சேர்ந்து படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனான அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டுவிட்டேன்.