Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah An-Naml — Ayah 47

قَالُواْ ٱطَّيَّرۡنَا بِكَ وَبِمَن مَّعَكَۚ قَالَ طَٰٓئِرُكُمۡ عِندَ ٱللَّهِۖ بَلۡ أَنتُمۡ قَوۡمٞ تُفۡتَنُونَ ٤٧
அவருடைய சமூகத்தார் அவரிடம் சத்தியத்தை விட்டுவிட்டு பிடிவாதத்துடன் கூறினார்கள்: “உம்மையும் உம்முடன் இருக்கும் நம்பிக்கையாளர்களையும் நாங்கள் துர்ச்சகுனமாகக் கருதுகிறோம்.” ஸாலிஹ் அவர்களிடம் கூறினார்: “உங்களுக்குத் நேரும் தீங்குகளுக்காக நீங்கள் விரட்டும் பறவை பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அதில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. மாறாக உங்களுக்கு வழங்கப்படும் நன்மை மற்றும் உங்களுக்கு நேரும் தீமையைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்படுகிறீர்கள்.