Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah An-Naml — Ayah 64

أَمَّن يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥ وَمَن يَرۡزُقُكُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِۗ أَءِلَٰهٞ مَّعَ ٱللَّهِۚ قُلۡ هَاتُواْ بُرۡهَٰنَكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ٦٤
கருவறைகளில் கட்டம் கட்டமாக படைக்க ஆரம்பித்து பின்னர் அதனை மரணிக்கச்செய்து மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புபவன் யார்? தன் புறத்திலிருந்து இறக்கப்படும் மழை மூலம் வானிலிருந்தும் தாவரங்களை முளைக்கச் செய்வதன் மூலம் பூமியிலிருந்தும் உங்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் சேர்ந்து இதனைச் செய்யும் வேறு ஏதாவது தெய்வம் உண்டா? -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “நிச்சயமாக நாங்கள்தாம் சத்தியத்தில் இருக்கின்றோம் என்று நீங்கள் கூறும் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் செய்துகொண்டிருக்கும் இணைவைப்புக்கு ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்.”