Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah An-Naml — Ayah 82

۞ وَإِذَا وَقَعَ ٱلۡقَوۡلُ عَلَيۡهِمۡ أَخۡرَجۡنَا لَهُمۡ دَآبَّةٗ مِّنَ ٱلۡأَرۡضِ تُكَلِّمُهُمۡ أَنَّ ٱلنَّاسَ كَانُواْ بِـَٔايَٰتِنَا لَا يُوقِنُونَ ٨٢
அவர்கள் தொடர்ந்தும் நிராகரிப்பு மற்றும் பாவங்களில் ஈடுபட்டதனால் வேதனை உறுதியாகி, தீயவர்கள் மட்டும் எஞ்சிவிட்டால், மறுமை நாள் நெருங்கும் போது அதன் மிகப் பெரும் அடையாளங்களில் ஒன்றை வெளிப்படுத்துவோம். “நம் தூதரின் மீது இறக்கப்பட்ட வசனங்களை மக்கள் நம்பாமல் இருந்தார்கள்” என அவர்களுக்குப் புரியும் மொழியில் பேசும் பூமியிலிருந்து வெளிப்படும் ஒரு விலங்கே அந்த அடையாளமாகும்.