Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah An-Naml — Ayah 84

حَتَّىٰٓ إِذَا جَآءُو قَالَ أَكَذَّبۡتُم بِـَٔايَٰتِي وَلَمۡ تُحِيطُواْ بِهَا عِلۡمًا أَمَّاذَا كُنتُمۡ تَعۡمَلُونَ ٨٤
தொடர்ந்து அவர்கள் இழுத்துச் செல்லப்படுவார்கள். விசாரணைக்கான இடத்தை வந்தடைந்தவுடன், அல்லாஹ் அவர்களைக் கண்டித்தவாறு கேட்பான்: “நான் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய, என் மார்க்கத்தை உள்ளடக்கிய என் வசனங்களை நீங்கள் மறுத்தீர்களா? அவற்றை நீங்கள் மறுக்க, அவை அசத்தியம் என்பதை நீங்கள் முழுமையாக அறியவுமில்லை. அல்லது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஏற்றுக் கொண்டீர்களா அல்லது நிராகரித்தீர்களா?