Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah An-Naml — Ayah 91

إِنَّمَآ أُمِرۡتُ أَنۡ أَعۡبُدَ رَبَّ هَٰذِهِ ٱلۡبَلۡدَةِ ٱلَّذِي حَرَّمَهَا وَلَهُۥ كُلُّ شَيۡءٖۖ وَأُمِرۡتُ أَنۡ أَكُونَ مِنَ ٱلۡمُسۡلِمِينَ ٩١
தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக நான் இந்த நகரத்தை - மக்காவை - கண்ணியப்படுத்திய இறைவனை வணங்குமாறு ஏவப்பட்டுள்ளேன். இந்த நகரத்தில் இரத்தம் சிந்தப்படக்கூடாது, எவர் மீதும் அநீதி இழைக்கப்படக்கூடாது, இங்குள்ள மரங்கள் வெட்டப்படக்கூடாது, விலங்குகள் வேட்டையாடப்படக்கூடாது. எல்லாவற்றின் ஆட்சியதிகாரமும் அவனுக்கே உரியது. நான் அவனுக்கு வழிப்பட்டு அடிபணிந்தவர்களில் ஒருவனாக இருக்க வேண்டும் என்றும் ஏவப்பட்டுள்ளேன்.