Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah An-Naml — Ayah 93

وَقُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِ سَيُرِيكُمۡ ءَايَٰتِهِۦ فَتَعۡرِفُونَهَاۚ وَمَا رَبُّكَ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ ٩٣
தூதரே!- நீர் கூறுவீராக: “எண்ணற்ற அருட்கொடைகளை அளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். உங்களிலும் வானத்திலும் பூமியிலும் வாழ்வாதாரத்திலும் விரைவில் தன் சான்றுகளை அவன் காட்டுவான். அப்போது உங்களை சத்தியத்தை ஏற்றுக்கொள்ள நேர்வழிவழிகாட்டும் அறிவைப் பெறுவீர்கள். நீங்கள் செய்யும் செயல்களை உம் இறைவன் கவனிக்காமல் இல்லை. மாறாக அவன் அவற்றை அறிவான். அதில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்கு கூலி வழங்குவான்.