Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Qasas — Ayah 13

فَرَدَدۡنَٰهُ إِلَىٰٓ أُمِّهِۦ كَيۡ تَقَرَّ عَيۡنُهَا وَلَا تَحۡزَنَ وَلِتَعۡلَمَ أَنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ ١٣
இவ்வாறு மூஸாவை அவரது தாயாரிடமே கொண்டு சேர்த்தோம். அது அருகிலிருந்து அவரைப் பார்த்து கண் குளிர்ச்சியடைவதற்காகவும் பிரிவால் அவர் கவலைகொள்ளாமல் இருப்பதற்காகவும் மீண்டும் அவரை அவளிடம் சேர்ப்போம் என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி சந்தேகம் இல்லாமல் உண்மையானது என்பதை அறிந்துகொள்வதற்காகவும்தான். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் இந்த வாக்குறுதியைக்குறித்து அறியவில்லை. நிச்சயமாக அவர்தான் மூஸாவின் தாய் என்பதை எவரும் அறிந்திருக்கவில்லை.