Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Qasas — Ayah 15

وَدَخَلَ ٱلۡمَدِينَةَ عَلَىٰ حِينِ غَفۡلَةٖ مِّنۡ أَهۡلِهَا فَوَجَدَ فِيهَا رَجُلَيۡنِ يَقۡتَتِلَانِ هَٰذَا مِن شِيعَتِهِۦ وَهَٰذَا مِنۡ عَدُوِّهِۦۖ فَٱسۡتَغَٰثَهُ ٱلَّذِي مِن شِيعَتِهِۦ عَلَى ٱلَّذِي مِنۡ عَدُوِّهِۦ فَوَكَزَهُۥ مُوسَىٰ فَقَضَىٰ عَلَيۡهِۖ قَالَ هَٰذَا مِنۡ عَمَلِ ٱلشَّيۡطَٰنِۖ إِنَّهُۥ عَدُوّٞ مُّضِلّٞ مُّبِينٞ ١٥
மக்கள் தமது வீடுகளில் ஓய்வெடுக்கும் நேரத்தில் மூஸா நகரத்தில் நுழைந்தார். அங்கு இரு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார். ஒருவர் அவரது சமூகமான இஸ்ரவேலர்களின் மக்களைச் சேர்ந்தவர். மற்றொருவர் மூஸாவின் எதிரியான ஃபிர்அவ்னின் கிப்தி குலத்தைச் சேர்ந்தவர். அவரது சமூகத்தைச் சேர்ந்தவர் எதிரி சமூகமான கிப்தி குலத்தை சேர்ந்தவருக்கு எதிராக மூஸாவிடம் உதவி கோரினார். மூஸா கிப்தி குலத்தைச் சேர்ந்தவனை தம் கையால் ஒரு குத்து குத்தினார். அந்த பலமான குத்தினால் அவர் செத்து மடிந்தார். மூஸா கூறினார்: “நிச்சயமாக இது ஷைத்தானின் அழகுபடுத்திய, ஏமாற்றமான செயலாகும். நிச்சயமாக அவன் தன்னைப் பின்பற்றுபவர்களை வழிகெடுப்பவனாகவும் பகிரங்கமான பகைவனாகவும் இருக்கின்றான். அவனது பகைமையின் காரணத்தாலும் அவன் என்னை வழிகெடுக்க நினைக்கும் வழிகேடன் என்பதுமே என்னிடமிருந்து இச்செயல் நிகழ்ந்ததற்கான காரணமாகும்.