Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Qasas — Ayah 23

وَلَمَّا وَرَدَ مَآءَ مَدۡيَنَ وَجَدَ عَلَيۡهِ أُمَّةٗ مِّنَ ٱلنَّاسِ يَسۡقُونَ وَوَجَدَ مِن دُونِهِمُ ٱمۡرَأَتَيۡنِ تَذُودَانِۖ قَالَ مَا خَطۡبُكُمَاۖ قَالَتَا لَا نَسۡقِي حَتَّىٰ يُصۡدِرَ ٱلرِّعَآءُۖ وَأَبُونَا شَيۡخٞ كَبِيرٞ ٢٣
அவர், நீர் புகட்டும் மத்யனின் நீர் நிலையை அடைந்தபோது அங்கு தங்களின் கால்நடைகளுக்கு நீர் புகட்டிக் கொண்டிருந்த மக்கள் கூட்டமொன்றைக் கண்டார். அவர்களுக்கு முன்னால் இரண்டு பெண்கள் தங்களின் ஆடுகளை மக்கள் புகட்டும் வரை நீர் நிலையைவிட்டுத் தடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டார். மூஸா அவர்களிடம் கேட்டார்: “உங்களுக்கு என்னவாயிற்று? ஏன் நீங்களும் மக்களுடன் சேர்ந்து உங்கள் கால்நடைகளுக்கு நீர் புகட்டவில்லை?” அவர்கள் இருவரும் கூறினார்கள்: “தாமதிப்பது எமது வழமை, ஏனெனில் மேய்ப்பாளர்களுடன் கலந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் செல்லும் வரை நாங்கள் எங்களின் ஆடுகளுக்கு நீர் புகட்ட முடியாது. எங்களின் தந்தை வயது முதிர்ந்தவராக இருக்கின்றார். அவரால் நீர் புகட்ட முடியாது. எனவே எங்களின் கால்நடைகளுக்கு நாங்கள் நீர் புகட்ட வேண்டிய நிர்ப்பந்தமாயிற்று.