Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Qasas — Ayah 29

۞ فَلَمَّا قَضَىٰ مُوسَى ٱلۡأَجَلَ وَسَارَ بِأَهۡلِهِۦٓ ءَانَسَ مِن جَانِبِ ٱلطُّورِ نَارٗاۖ قَالَ لِأَهۡلِهِ ٱمۡكُثُوٓاْ إِنِّيٓ ءَانَسۡتُ نَارٗا لَّعَلِّيٓ ءَاتِيكُم مِّنۡهَا بِخَبَرٍ أَوۡ جَذۡوَةٖ مِّنَ ٱلنَّارِ لَعَلَّكُمۡ تَصۡطَلُونَ ٢٩
மூஸா இரு தவணைகளில் அதிகபட்ச தவணையான பத்து வருடங்களை நிறைவுசெய்து தம் குடும்பத்தாருடன் மத்யனிலிருந்து எகிப்தை நோக்கி புறப்பட்டார். அப்போது தூர் மலைக்கு அருகில் நெருப்பைக் கண்டார். தம் குடும்பத்தாரிடம் கூறினார்: “இங்கேயே இருங்கள். நான் நெருப்பைக் காண்கிறேன். அங்கிருந்து நான் ஏதேனும் செய்தியைக் கொண்டு வருகிறேன் அல்லது நீங்கள் குளிர்காயும் பொருட்டு நெருப்பை மூட்டுவதற்காக அங்கிருந்து ஏதேனும் எரிகொள்ளியைக் கொண்டு வருகிறேன்.