Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Qasas — Ayah 32

ٱسۡلُكۡ يَدَكَ فِي جَيۡبِكَ تَخۡرُجۡ بَيۡضَآءَ مِنۡ غَيۡرِ سُوٓءٖ وَٱضۡمُمۡ إِلَيۡكَ جَنَاحَكَ مِنَ ٱلرَّهۡبِۖ فَذَٰنِكَ بُرۡهَٰنَانِ مِن رَّبِّكَ إِلَىٰ فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِۦٓۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمٗا فَٰسِقِينَ ٣٢
“உம் வலது கையை சட்டையின் கழுத்துப் பக்கமாக உள்ள இடைவெளிக்குள் நுழைப்பீராக. அது வெண்குஷ்டம் இன்றி வெண்மையாக வெளிப்படும்.” மூஸா தம் கையை நுழைத்தார். அது பனிக்கட்டியைப்போன்று வெண்மையாகத் தோன்றியது. “அச்சம் நீங்குவதற்காக உம் கையை உம் பக்கம் ஒடுக்கிக் கொள்ளும்.” அவர் தம் கையை தம் பக்கம் ஒடுக்கிக் கொண்டார். அச்சம் நீங்கியது. ஃபிர்அவனிடமும் அவன் சமூகத்தின் செல்வாக்கு மிகுந்தவர்களிடம் செல்வதற்காக இவையிரண்டும் -கை, கைத்தடி- உம் இறைவனிடமிருந்து உமக்கு வழங்கப்பட்ட சான்றுகளாகும். நிச்சயமாக அவர்கள் நிராகரித்து பாவங்களில் ஈடுபட்டு அல்லாஹ்வுக்கு அடிபணியாதவதை விட்டும் வெளியேறியவர்களாக இருக்கிறார்கள்.