Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Qasas — Ayah 35

قَالَ سَنَشُدُّ عَضُدَكَ بِأَخِيكَ وَنَجۡعَلُ لَكُمَا سُلۡطَٰنٗا فَلَا يَصِلُونَ إِلَيۡكُمَا بِـَٔايَٰتِنَآۚ أَنتُمَا وَمَنِ ٱتَّبَعَكُمَا ٱلۡغَٰلِبُونَ ٣٥
அல்லாஹ் மூஸாவின் பிரார்த்தனைக்குப் பதிலளித்தவாறு கூறினான்: “-மூஸாவே!- உம் சகோதரர் ஹாரூனையும் தூதராக்கி, உதவியாளராக்கி உம்மை நாம் வலுப்படுத்துவோம். உங்கள் இருவருக்கும் சான்றையும் ஆதரவையும் வழங்குவோம். எனவே அவர்கள் உங்களுக்கு நீங்கள் விரும்பாத எந்த தீங்கும் இழைக்க முடியாது. நாம் உங்களுக்கு வழங்கி அனுப்பிய அத்தாட்சிகளின் காரணமாக நீங்களும் உங்களைப் பின்பற்றும் நம்பிக்கையாளர்களும்தாம் வெற்றி பெறுவார்கள்.