Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Qasas — Ayah 4

إِنَّ فِرۡعَوۡنَ عَلَا فِي ٱلۡأَرۡضِ وَجَعَلَ أَهۡلَهَا شِيَعٗا يَسۡتَضۡعِفُ طَآئِفَةٗ مِّنۡهُمۡ يُذَبِّحُ أَبۡنَآءَهُمۡ وَيَسۡتَحۡيِۦ نِسَآءَهُمۡۚ إِنَّهُۥ كَانَ مِنَ ٱلۡمُفۡسِدِينَ ٤
நிச்சயமாக ஃபிர்அவ்ன் எகிப்தில் வரம்புமீறினான். அங்குள்ளவர்களை பல பிரிவினராக்கி அவர்களில் இஸ்ராயீலின் மக்களை அடக்கி ஒடுக்கினான். அவர்களின் ஆண்மக்களைக் கொலை செய்து அவர்களை மென்மேலும் இழிவபடுத்தும் விதமாக அவர்களின் பெண்மக்களை பணிவிடை செய்வதற்காக உயிரோடு விட்டுவைத்திருந்தான். நிச்சயமாக அவன் பூமியில் அநியாயம் செய்து, வரம்பு மீறி, கர்வம்கொண்டு குழப்பம் விளைவிப்பவர்களில் ஒருவனாக இருந்தான்.