Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Qasas — Ayah 41

وَجَعَلۡنَٰهُمۡ أَئِمَّةٗ يَدۡعُونَ إِلَى ٱلنَّارِۖ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ لَا يُنصَرُونَ ٤١
அவர்களை நிராகரிப்பையும் வழிகேட்டையும் பரப்பி நரகத்தின்பால் அழைப்பு விடுக்கும் வழிகேடர்களுக்கும், அநியாயக்காரர்களுக்கும் முன்மாதிரிகளாக ஆக்கினோம். மறுமை நாளில் வேதனையிலிருந்து காப்பாற்றப்பட்டு உதவி செய்யப்பட மாட்டார்கள். மாறாக அவர்கள் ஏற்படுத்திய தீய வழிமுறையினால், வழிகேட்டின்பால் அழைப்பு விடுத்ததனால் அவர்களுக்குப் பல மடங்கு வேதனையளிக்கப்படும். அவர்களின் வழிகெட்ட செயல்கள், அவற்றில் அவர்களைப் பின்பற்றியவர்களின் செயல்களின் பாவங்களும் அவர்களின் கணக்கில் எழுதப்படும்.