Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Qasas — Ayah 43

وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ مِنۢ بَعۡدِ مَآ أَهۡلَكۡنَا ٱلۡقُرُونَ ٱلۡأُولَىٰ بَصَآئِرَ لِلنَّاسِ وَهُدٗى وَرَحۡمَةٗ لَّعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ ٤٣
தங்களின்பால் அனுப்பப்பட்ட தூதர்களை பொய்ப்பித்த சமூகங்களை அழித்த பிறகு நாம் மூஸாவிற்கு தவ்ராத்தை வழங்கினோம். அது மனிதர்கள் நடைமுறைப்படுத்த வேண்டிய பயனுள்ள விஷயங்களையும் விட்டுவிட வேண்டிய தீங்குதரும் விஷயங்களையும் அவர்களுக்குத் தெளிவுபடுத்தக்கூடியதாகவும் அவர்களுக்கு நன்மையின்பால் வழிகாட்டக்கூடியதாகவும் இவ்வுலக மற்றும் மறுவுலக நன்மைகளை உள்ளடக்கிய அருளாகவும் திகழ்ந்தது. அதன் மூலம் அவர்கள்அல்லாஹ் தங்களுக்கு நல்கிய அருட்கொடைகளை நினைவுபடுத்தி அவனுக்கு நன்றிசெலுத்தி அவன் மீது நம்பிக்கைகொள்ளலாம்.