Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Qasas — Ayah 45

وَلَٰكِنَّآ أَنشَأۡنَا قُرُونٗا فَتَطَاوَلَ عَلَيۡهِمُ ٱلۡعُمُرُۚ وَمَا كُنتَ ثَاوِيٗا فِيٓ أَهۡلِ مَدۡيَنَ تَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَٰتِنَا وَلَٰكِنَّا كُنَّا مُرۡسِلِينَ ٤٥
ஆயினும் நாம் மூஸாவிற்குப் பிறகு பல சமூகங்களை உருவாக்கினோம். அவர்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதிகளை மறந்துவிடுமளவு பல்லாண்டுகள் கடந்தன. நீர் நம்முடைய வசனங்களை அவர்களிடம் எடுத்துரைப்பதற்கு நீர் மத்யன்வாசிகளுடன் வசிக்கவில்லை. மாறாக நாம் உம்மை நம் புறத்திலிருந்து தூதராக அனுப்பியுள்ளோம்.மூஸாவின் செய்தியையும் மத்யனில் அவர் தங்கியதையும் நாம் வஹியின் மூலம் உமக்கு அறிவித்தோம். அல்லாஹ் உமக்கு வஹியின் மூலம் அறிவித்ததை நீர் மக்களிடம் அறிவித்தீர்.