Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Qasas — Ayah 50

فَإِن لَّمۡ يَسۡتَجِيبُواْ لَكَ فَٱعۡلَمۡ أَنَّمَا يَتَّبِعُونَ أَهۡوَآءَهُمۡۚ وَمَنۡ أَضَلُّ مِمَّنِ ٱتَّبَعَ هَوَىٰهُ بِغَيۡرِ هُدٗى مِّنَ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ ٥٠
தவ்ராதையும் குர்ஆனையும் விட நேர்வழிமிக்க ஒரு நூலைக் கொண்டுவருவதற்கான உமது அழைப்புக்கு குறைஷிகள் பதிலளிக்கவில்லையெனில் நிச்சயமாக அவர்கள் ஆதாரத்தின் அடிப்படையில் நிராகரிக்கவில்லை, திட்டமாக தங்களின் மன இச்சையின்படியே நிராகரிக்கிறார்கள் என்பதை உறுதியாக அறிந்து கொள்வீராக. அல்லாஹ்விடமிருந்துள்ள வழிகாட்டுதல் இன்றி தங்களின் மன இச்சையைப் பின்பற்றுபவர்களைவிட வழிகெட்டவர்கள் வேறு யாருமில்லை. நிச்சயமாக அல்லாஹ்வை நிராகரித்து தங்களுக்குத்தாங்களே அநீதி இழைத்துக் கொள்ளும், அநியாயக்காரர்களுக்கு நேர்வழிபெற அல்லாஹ் உதவுவதில்லை.