Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Qasas — Ayah 54

أُوْلَٰٓئِكَ يُؤۡتَوۡنَ أَجۡرَهُم مَّرَّتَيۡنِ بِمَا صَبَرُواْ وَيَدۡرَءُونَ بِٱلۡحَسَنَةِ ٱلسَّيِّئَةَ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ ٥٤
மேற்கூறப்பட்ட பண்புகளை உடையவர்கள் தங்களின் வேதத்தின் மீது நம்பிக்கைகொண்டு பொறுமையாக இருந்ததனாலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டதும் அவரை நம்பிக்கைகொண்டதனாலும் அவர்களின் செயல்களுக்கு அல்லாஹ் இருதடவை அவர்களுக்கு கூலியை வழங்குவான். அவர்கள் தாங்கள் செய்யும் நற்செயல்களின் நன்மைகளால் தாங்கள் சம்பாதித்த பாவங்களை அழிக்கிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நன்மையான விஷயங்களில் செலவும் செய்கிறார்கள்.