Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Qasas — Ayah 71

قُلۡ أَرَءَيۡتُمۡ إِن جَعَلَ ٱللَّهُ عَلَيۡكُمُ ٱلَّيۡلَ سَرۡمَدًا إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ مَنۡ إِلَٰهٌ غَيۡرُ ٱللَّهِ يَأۡتِيكُم بِضِيَآءٍۚ أَفَلَا تَسۡمَعُونَ ٧١
தூதரே!- இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ் மறுமை நாள் வரை முடிவின்றி இரவை உங்கள் மீது நிரந்தரமாக்கிவிட்டால் அல்லாஹ்வைத் தவிர எந்த இறைவனால் உங்களுக்கு பகலின் ஒளியைப் போன்ற ஓர் ஒளியைக் கொண்டுவர முடியும்? என்பதை எனக்கு அறிவியுங்கள். நீங்கள் இந்த ஆதாரங்களை செவியேற்று, அதனைக் கொண்டுவர அல்லாஹ்வைத் தவிரவுள்ள வேறு எந்த இறைவனும் இல்லை என்பதை அறிய மாட்டீர்களா?”