Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Qasas — Ayah 80

وَقَالَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ وَيۡلَكُمۡ ثَوَابُ ٱللَّهِ خَيۡرٞ لِّمَنۡ ءَامَنَ وَعَمِلَ صَٰلِحٗاۚ وَلَا يُلَقَّىٰهَآ إِلَّا ٱلصَّٰبِرُونَ ٨٠
கல்வியறிவு வழங்கப்பட்டவர்கள் காரூனின் அலங்காரத்தைக் கண்டபோது, அவனது தோழர்களின் ஏங்குதலைச் செவியுற்றபோது கூறினார்கள்: “உங்களுக்குக் கேடுதான். அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிபவர்களுக்கு மறுமையில் அல்லாஹ் வழங்கும் கூலி காரூனுக்கு வழங்கப்பட்ட உலக அலங்காரத்தைவிட சிறந்ததாகும். அழியக்கூடிய இவ்வுலக இன்பங்களை விட அல்லாஹ்விடம் இருக்கும் நிலையான இன்பங்களைத் தேர்ந்தெடுத்த பொறுமையாளர்களே இந்த வார்த்தையைக் கூறுவதற்கும் அதன்படி செயல்படுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுவார்கள்.