Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Qasas — Ayah 82

وَأَصۡبَحَ ٱلَّذِينَ تَمَنَّوۡاْ مَكَانَهُۥ بِٱلۡأَمۡسِ يَقُولُونَ وَيۡكَأَنَّ ٱللَّهَ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦ وَيَقۡدِرُۖ لَوۡلَآ أَن مَّنَّ ٱللَّهُ عَلَيۡنَا لَخَسَفَ بِنَاۖ وَيۡكَأَنَّهُۥ لَا يُفۡلِحُ ٱلۡكَٰفِرُونَ ٨٢
புதைவதற்கு முன்னால் அவனைப்போன்று செல்வந்தனாகவும் அலங்காரம் மிக்கவனாகவும் ஆக வேண்டுமே என்று ஏங்கியவர்கள் கைசேதப்பட்டு படிப்பினை பெற்றவர்களாக கூறலானார்கள்: “நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக வழங்குகிறான். அவர்களில் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகின்றான் என்பதை நாம் அறியவில்லையா? நாங்கள் கூறியதற்காக எங்களைத் தண்டிக்காமல் திட்டமாக அல்லாஹ் எங்கள் மீது அருள்புரியவில்லையெனில் காரூன் புதைக்கப்பட்டது போன்று நாமும் புதைக்கப்பட்டிருப்போம். நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றிபெற மாட்டார்கள். மாறாக ஈருகிலும் நிச்சயமாக அவர்களின் முடிவு இழப்பாகவே அமையும்.