Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-'Ankabut — Ayah 10

وَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ ءَامَنَّا بِٱللَّهِ فَإِذَآ أُوذِيَ فِي ٱللَّهِ جَعَلَ فِتۡنَةَ ٱلنَّاسِ كَعَذَابِ ٱللَّهِۖ وَلَئِن جَآءَ نَصۡرٞ مِّن رَّبِّكَ لَيَقُولُنَّ إِنَّا كُنَّا مَعَكُمۡۚ أَوَلَيۡسَ ٱللَّهُ بِأَعۡلَمَ بِمَا فِي صُدُورِ ٱلۡعَٰلَمِينَ ١٠
மக்களில் சிலர், “நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டோம்“ என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் நிராகரிப்பாளர்களால் துன்புறுத்தப்பட்டால் அவர்களின் வேதனையை அல்லாஹ்வின் வேதனையைப் போன்று ஆக்கி நிராகரிப்பாளர்களின் விருப்பத்திற்கேற்ப ஈமானை விட்டும் பின்வாங்கி விடுகிறார்கள். -தூதரே!- உமக்கு உம் இறைவனிடமிருந்து ஏதேனும் வெற்றி கிடைத்தால், “நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக நாங்களும் உங்களுடன் நம்பிக்கையாளர்களாக இருந்தோம்” என்று கூறுகிறார்கள். மக்களின் உள்ளங்களிலுள்ளவற்றை அல்லாஹ் அறிந்தவனில்லையா? உள்ளங்களிலுள்ள நம்பிக்கை, நிராகரிப்பு எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. உள்ளங்களிலுள்ளவற்றை அல்லாஹ்வே அவர்களை விட நன்கறிந்தவனாக இருக்கும் போது, அவற்றில் என்ன உள்ளது என அவர்கள் அல்லாஹ்வுக்கு சொல்லிக் கொடுக்கிறார்களா?.