Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-'Ankabut — Ayah 14

وَلَقَدۡ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦ فَلَبِثَ فِيهِمۡ أَلۡفَ سَنَةٍ إِلَّا خَمۡسِينَ عَامٗا فَأَخَذَهُمُ ٱلطُّوفَانُ وَهُمۡ ظَٰلِمُونَ ١٤
நாம் நூஹை அவரது சமூகத்தின்பால் தூதராக அனுப்பினோம். அவர் தொள்ளாயிரத்து ஐம்பது வருடங்கள் அவர்களிடையே தங்கியிருந்து அவர்களை ஓரிறைக் கொள்கையின் பக்கம் அழைத்தார். அவர்கள் அவரை பொய்ப்பித்தார்கள். தொடர்ந்தும் தமது நிராகரிப்பிலேயே இருந்தார்கள். அல்லாஹ்வை நிராகரித்து தூதர்களைப் பொய்ப்பித்து அநியாயக்காரர்களாகிவிட்ட நிலையில் வெள்ளப் பிரளயம் அவர்களைத் தாக்கியது. எனவே மூழ்கி அவர்கள் அழிந்தார்கள்.