Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-'Ankabut — Ayah 17

إِنَّمَا تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ أَوۡثَٰنٗا وَتَخۡلُقُونَ إِفۡكًاۚ إِنَّ ٱلَّذِينَ تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ لَا يَمۡلِكُونَ لَكُمۡ رِزۡقٗا فَٱبۡتَغُواْ عِندَ ٱللَّهِ ٱلرِّزۡقَ وَٱعۡبُدُوهُ وَٱشۡكُرُواْ لَهُۥٓۖ إِلَيۡهِ تُرۡجَعُونَ ١٧
இணைவைப்பாளர்களே!- உங்களுக்குப் பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ சக்தியற்ற சிலைகளைத்தான் நீங்கள் வணங்குகிறீர்கள். அவற்றை வணக்கத்திற்குத் தகுதியானவை என்று எண்ணி நீங்கள் இட்டுக்கட்டுகிறீர்கள். நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் தெய்வங்கள் உங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க சக்தி பெறாது. அல்லாஹ்விடமே வாழ்வாதாரம் தேடுங்கள். அவனே வாழ்வாதாரம் அளிக்கக்கூடியவன். அவனை மட்டுமே வணங்குங்கள். அவன் உங்களுக்கு அளித்த அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துங்கள். நீங்கள் மறுமை நாளில் விசாரணைக்காகவும் கூலி பெறுவதற்காகவும் அவனிடமே திரும்ப வேண்டும். உங்களின் சிலைகளிடம் அல்ல.