Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-'Ankabut — Ayah 20

قُلۡ سِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَٱنظُرُواْ كَيۡفَ بَدَأَ ٱلۡخَلۡقَۚ ثُمَّ ٱللَّهُ يُنشِئُ ٱلنَّشۡأَةَ ٱلۡأٓخِرَةَۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ٢٠
தூதரே!- மறுமையில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் இவர்களிடம் கூறுவீராக: “பூமியில் சுற்றித் திரிந்து அல்லாஹ் எவ்வாறு படைப்பைத் தொடங்கினான் என்பதையும் பின்னர் அவன் மனிதர்கள் மரணித்த பிறகு விசாரணைக்காக எவ்வாறு அவர்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புகிறான் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். நிச்சயமாக அவன் ஒவ்வொன்றின் மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்திவிட முடியாது. முதலில் எப்படி அவனுக்கு மக்களைப் படைக்க முடியாமல் இருக்கவில்லையோ அது போன்றே அவர்களை எழுப்பவும் அவன் முடியாதவனல்ல.