Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-'Ankabut — Ayah 24

فَمَا كَانَ جَوَابَ قَوۡمِهِۦٓ إِلَّآ أَن قَالُواْ ٱقۡتُلُوهُ أَوۡ حَرِّقُوهُ فَأَنجَىٰهُ ٱللَّهُ مِنَ ٱلنَّارِۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ ٢٤
இப்ராஹீம் தனது சமூகத்தை அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி ஏனைய தெய்வங்களை வணங்குவதை விட்டுவிடும் படி ஏவியதற்கு அவரது சமூகம் அளித்த பதில் இதுதான்: “உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யும் பொருட்டு அவரைக் கொன்றுவிடுங்கள் அல்லது நெருப்பில் போட்டுவிடுங்கள்.” அல்லாஹ் நெருப்பிலிருந்து அவரைப் பாதுகாத்தான். அவர்கள் நெருப்பில் போட்ட பிறகும் அல்லாஹ் அவரைக் காப்பாற்றியதில், நம்பிக்கைகொள்ளும் மக்களுக்குப் படிப்பினைகள் இருக்கின்றன. ஏனெனில் நிச்சயமாக அவர்கள்தாம் படிப்பினைகளைக் கொண்டு பயனடைவார்கள்.