Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-'Ankabut — Ayah 29

أَئِنَّكُمۡ لَتَأۡتُونَ ٱلرِّجَالَ وَتَقۡطَعُونَ ٱلسَّبِيلَ وَتَأۡتُونَ فِي نَادِيكُمُ ٱلۡمُنكَرَۖ فَمَا كَانَ جَوَابَ قَوۡمِهِۦٓ إِلَّآ أَن قَالُواْ ٱئۡتِنَا بِعَذَابِ ٱللَّهِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ٢٩
நிச்சயமாக நீங்கள் உங்களின் இச்சையைத் தீர்த்துக்கொள்வதற்காக ஆண்களின் பின்புறத்தில் வருகிறீர்களா? பயணிகளுக்கு பாதையில் தடையாக இருக்கிறீர்கள். நீங்கள் செய்யும் மானக்கேடான செயலுக்குப் பயந்து நீங்கள் இருக்கும் ஊர் வழியாக எவரும் கடந்துசெல்வதில்லை. உங்களின் அவைகளில் வைத்தே நிர்வாணம், வார்த்தையினாலும் செயலினாலும் உங்களைக் கடந்து செல்வோரை துன்புறுத்தல் போன்ற மோசமான காரியங்களில் ஈடுபடுகிறீர்களா?” மோசமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என அவர் அவர்களைத் தடுத்ததற்கு அவரது சமூகத்தினர் கூறிய பதில் இதுதான்: “நீர் கூறும் வாதத்தில் உண்மையாளராக இருந்தால் நீர் எச்சரிக்கும் வேதனையை எங்களிடம் கொண்டுவாரும்.”