Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-'Ankabut — Ayah 38

وَعَادٗا وَثَمُودَاْ وَقَد تَّبَيَّنَ لَكُم مِّن مَّسَٰكِنِهِمۡۖ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيۡطَٰنُ أَعۡمَٰلَهُمۡ فَصَدَّهُمۡ عَنِ ٱلسَّبِيلِ وَكَانُواْ مُسۡتَبۡصِرِينَ ٣٨
ஹூத் உடைய மக்கள் ஆதையும், ஸாலிஹின் மக்கள் ஸமூதையும் நாம் அழித்துள்ளோம். -மக்காவாசிகளே!- ஹழ்ரமௌத்தின் ஷிஹ்ரிலும், ஹிஜ்ரிலும் உள்ள அவர்களின் வசிப்பிடங்களிலிருந்து அவர்கள் அழிக்கப்பட்ட அடையாளங்கள் உங்களுக்குத் தெளிவாகிவிட்டன. பாழடைந்த அவர்களின் வசிப்பிடங்கள் இதற்கு சாட்சியாக இருக்கின்றன. அவர்கள் செய்து கொண்டிருந்த நிராகரிப்பான மற்றும் ஏனைய பாவமான காரியங்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகுபடுத்திக் காட்டினான். அவர்களை நேரான வழியை விட்டும் திருப்பிவிட்டான். அவர்களது தூதர்கள் கற்றுக்கொடுத்தன் மூலம் சத்தியத்தையும் வழிகேட்டையும் நேர்வழியையும் தெளிவாக அறிந்தவர்களாக இருந்தார்கள். ஆயினும் அவர்கள் நேர்வழியைப் பின்பற்றாமல் தங்களின் மனோ இச்சையைப் பின்பற்றுவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.