Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-'Ankabut — Ayah 40

فَكُلًّا أَخَذۡنَا بِذَنۢبِهِۦۖ فَمِنۡهُم مَّنۡ أَرۡسَلۡنَا عَلَيۡهِ حَاصِبٗا وَمِنۡهُم مَّنۡ أَخَذَتۡهُ ٱلصَّيۡحَةُ وَمِنۡهُم مَّنۡ خَسَفۡنَا بِهِ ٱلۡأَرۡضَ وَمِنۡهُم مَّنۡ أَغۡرَقۡنَاۚ وَمَا كَانَ ٱللَّهُ لِيَظۡلِمَهُمۡ وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ ٤٠
முன்பு கூறப்பட்ட ஒவ்வொருவரையும் நம் அழிக்கும் வேதனையால் நாம் தண்டித்தோம். அவர்களில் லூத்துடைய சமூகத்தின் மீது சுடப்பட்ட கல்மழையைப் பொழியச் செய்தோம். அவர்களில் ஸாலிஹ் மற்றும் ஷுஐபின் சமூகங்களைப் பேரிடி தாக்கியது. அவர்களில் காரூனை பூமியில் புதையச் செய்தோம். அவர்களில் நூஹின் சமூகம், ஃபிர்அவ்ன், ஹாமான் ஆகியவர்களை மூழ்கடித்து அழித்தோம். பாவமின்றி அவர்களைத் தண்டித்து அல்லாஹ் அவர்கள் மீது அநீதி இழைக்கவில்லை. மாறாக அவர்கள் பாவங்கள் புரிந்து தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள், தண்டனைக்கு உரியவர்களாக ஆனார்கள்.