Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-'Ankabut — Ayah 45

ٱتۡلُ مَآ أُوحِيَ إِلَيۡكَ مِنَ ٱلۡكِتَٰبِ وَأَقِمِ ٱلصَّلَوٰةَۖ إِنَّ ٱلصَّلَوٰةَ تَنۡهَىٰ عَنِ ٱلۡفَحۡشَآءِ وَٱلۡمُنكَرِۗ وَلَذِكۡرُ ٱللَّهِ أَكۡبَرُۗ وَٱللَّهُ يَعۡلَمُ مَا تَصۡنَعُونَ ٤٥
தூதரே!- அல்லாஹ் உமக்கு வஹியின் மூலம் அறிவிக்கும் குர்ஆனை மக்களுக்குப் படித்துக் காட்டுவீராக. தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுவீராக. பரிபூரணமான முறையில் நிறைவேற்றப்படும் தொழுகை தொழக்கூடியவனை பாவங்கள் மற்றும் தீய காரியங்களில் விழுந்துவிடாமல் தடுக்கிறது ஏனெனில் அது உள்ளங்களில் ஏற்படுத்தும் ஒளி மனிதனை பாவங்களைவிட்டும் தடுக்கிறது, நற்செயல்களின்பால் வழிகாட்டுகிறது அனைத்தையும்விட அல்லாஹ்வை நினைவுகூர்வதே பெரிதானதாகும். நீங்கள் செய்யும் அனைத்தையும் அல்லாஹ் அறிவான். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான். நிச்சயமாக நலவாக இருந்தால் நன்மையையும் தீமையாக இருந்தால் தீமையையும் வழங்குவான்.