Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-'Ankabut — Ayah 50

وَقَالُواْ لَوۡلَآ أُنزِلَ عَلَيۡهِ ءَايَٰتٞ مِّن رَّبِّهِۦۚ قُلۡ إِنَّمَا ٱلۡأٓيَٰتُ عِندَ ٱللَّهِ وَإِنَّمَآ أَنَا۠ نَذِيرٞ مُّبِينٌ ٥٠
இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள்: “முந்தைய தூதர்களின் மீது இறக்கப்பட்டது போன்று இறைவனிடமிருந்து முஹம்மதின் மீதும் அற்புதங்கள் இறக்கப்பட வேண்டாமா?” -தூதரே!- இவ்வாறு ஆலோசனை கூறும் இவர்களிடம் நீர் கூறுவீராக: “நிச்சயமாக அற்புதங்கள் அல்லாஹ்வின் கைவசமே உள்ளன. அவன் அவற்றை நாடியபோது இறக்குகின்றான். என்னால் அவற்றை கொண்டுவர முடியாது. மாறாக நிச்சயமாக நான் உங்களுக்கு அல்லாஹ்வின் வேதனையைக்குறித்து தெளிவாக எச்சரிப்பவன் மாத்திரமே.”