Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-'Ankabut — Ayah 6

وَمَن جَٰهَدَ فَإِنَّمَا يُجَٰهِدُ لِنَفۡسِهِۦٓۚ إِنَّ ٱللَّهَ لَغَنِيٌّ عَنِ ٱلۡعَٰلَمِينَ ٦
யார் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதற்கும் பாவங்களிலிருந்து விலகுவதற்கும் முயற்சி செய்கிறாரோ, அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறாரோ அவர் தமக்காகவே முயற்சி செய்கிறார். நிச்சயமாக அதன் பலன் அவருக்கே. படைப்புகள் அனைத்தையும் விட்டு அல்லாஹ் தேவையற்றவன். அவர்களின் வணக்கத்தினால் அவனுக்கு எதுவும் கூடுவதுமில்லை. அவர்களின் பாவத்தினால் எதுவும் குறைந்து விடுவதுமில்லை.