Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-'Ankabut — Ayah 8

وَوَصَّيۡنَا ٱلۡإِنسَٰنَ بِوَٰلِدَيۡهِ حُسۡنٗاۖ وَإِن جَٰهَدَاكَ لِتُشۡرِكَ بِي مَا لَيۡسَ لَكَ بِهِۦ عِلۡمٞ فَلَا تُطِعۡهُمَآۚ إِلَيَّ مَرۡجِعُكُمۡ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ٨
தாய், தந்தையருடன் நல்ல முறையில் நடந்துகொள்ளும்படி, அவர்களுக்கு உபகாரம் செய்யும்படி நாம் மனிதனுக்கு வஸிய்யத் செய்துள்ளோம். -மனிதனே!- உன் தாய், தந்தையர் -ஸஃத் இப்னு அபீ வக்காஸ் அவர்களுக்கு நிகழ்ந்தது போன்று- உனக்கு அறிவில்லாத ஒன்றை எனக்கு இணையாக்குமாறு உன்னை வற்புறுத்தினால் அவர்கள் இருவருக்கும் கட்டுப்படாதே. ஏனெனில் நிச்சயமாக படைப்பாளனின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு படைப்புகளுக்கு கட்டுப்படக்கூடாது. நீங்கள் மறுமை நாளில் என்பக்கம் மட்டுமே திரும்ப வேண்டும். நீங்கள் உலகில் செய்துகொண்டிருந்த செயல்கள் அனைத்தையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன். அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவேன்.