அல்லது வானத்தில் இருக்கும் அல்லாஹ் லூத்தின் சமூகத்தின்மீது அனுப்பியதுபோன்று உங்கள்மீதும் கல்மழையைப் பொழியச் செய்வான் என்பதைக்குறித்து அச்சமற்று இருக்கின்றீர்களா? என் வேதனையைக் கண்ணால் காணும்போது உங்களை நான் எச்சரித்ததை அறிந்துகொள்வீர்கள். ஆனால் வேதனையைக் கண்ட பிறகு அதன் மூலம் உங்களால் பயன்பெறவே முடியாது.