Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Mulk — Ayah 8

تَكَادُ تَمَيَّزُ مِنَ ٱلۡغَيۡظِۖ كُلَّمَآ أُلۡقِيَ فِيهَا فَوۡجٞ سَأَلَهُمۡ خَزَنَتُهَآ أَلَمۡ يَأۡتِكُمۡ نَذِيرٞ ٨
அது தன்னில் பிரவேசிப்பவர்களின் மீதுள்ள கடுமையான கோபத்தால் தனித்தனியாகிவிடுவது போலத் தோன்றும். அதற்குரியவர்களில் ஒரு கூட்டம் அதில் எறியப்படும்போதெல்லாம் அங்கு நியமிக்கப்பட்டுள்ள வானவர்கள் அவர்களிடம் பரிகாசமாக கேட்பார்கள்: “உலகில் அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு அச்சுறுத்தக்கூடிய ஒரு தூதர் உங்களிடம் வரவில்லையா?”