Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Jinn — Ayah 9

وَأَنَّا كُنَّا نَقۡعُدُ مِنۡهَا مَقَٰعِدَ لِلسَّمۡعِۖ فَمَن يَسۡتَمِعِ ٱلۡأٓنَ يَجِدۡ لَهُۥ شِهَابٗا رَّصَدٗا ٩
இதற்கு முன்னர் நாங்கள் வானத்தில் நிலைகளை அமைத்து அங்கு நடக்கும் வானவர்களின் உரையாடலை செவியேற்று பூமியிலுள்ள ஜோதிடர்களுக்கு அறிவிப்பவர்களாக இருந்தோம். ஆனால் விஷயம் மாறிவிட்டது. இப்போது நம்மில் யார் செவியேற்கிறாரோ அவர் தமக்காக தயார்நிலையிலுள்ள நெருப்பையே கண்டுகொள்வார். அவர் நெருங்கிச் சென்றால் தீப்பந்தம் எரியப்பட்டு அவரை அது அழித்துவிடும்.