Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Muzzammil — Ayah 16

فَعَصَىٰ فِرۡعَوۡنُ ٱلرَّسُولَ فَأَخَذۡنَٰهُ أَخۡذٗا وَبِيلٗا ١٦
ஃபிர்அவ்ன் தன்னிடம் தனது இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதருக்குக் கீழ்ப்படிய மறுத்தான். நாம் உலகில் அவனை மூழ்கடித்து கடுமையான முறையில் தண்டித்தோம். மறுமையில் நரக வேதனையால் நாம் அவனைத் தண்டிப்போம். நீங்கள் உங்கள் தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்படாதீர்கள். அவ்வாறு செயல்பட்டால் அவனுக்கு நேர்ந்ததைப் போன்றே உங்களுக்கும் நேரும்.