நிச்சயமாக நம்பிக்கைகொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் அல்லாஹ்வின் மீது மட்டும் கொண்ட நம்பிக்கையிலிருந்து திருப்ப வேண்டும் என்பதற்காக நெருப்பால் அவர்களைத் தண்டித்து பின்னர் தாங்கள் செய்த பாவங்களுக்கு அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோராதவர்களுக்கு அவர்கள் நம்பிக்கையாளர்களை எரித்ததற்குத் தண்டனையாக மறுமை நாளில் நரக வேதனையும் நெருப்பின் வேதனையும் உண்டு. அது அவர்களை எரித்துப் பொசுக்கிவிடும்.