Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah An-Naml — Ayah 39

قَالَ عِفۡرِيتٞ مِّنَ ٱلۡجِنِّ أَنَا۠ ءَاتِيكَ بِهِۦ قَبۡلَ أَن تَقُومَ مِن مَّقَامِكَۖ وَإِنِّي عَلَيۡهِ لَقَوِيٌّ أَمِينٞ ٣٩
மூர்க்கத்தனமான ஜின் ஒன்று கூறியது: “நீங்கள் தற்போது இருக்கும் உங்களின் அவையிலிருந்து எழுந்திருக்கும் முன்னரே நான் அவளது அரியணையைக் கொண்டு வந்துவிடுவேன். நிச்சயமாக நான் அதனைச் சுமப்பதற்குச் சக்தியுடையவனாகவும் அதிலுள்ளவற்றில் எதனையும் குறைத்துவிடாமல் எடுத்துவர முடியுமான நம்பிக்கைக்குரியவனாகவும் இருக்கின்றேன்.