Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah An-Naml — Ayah 40

قَالَ ٱلَّذِي عِندَهُۥ عِلۡمٞ مِّنَ ٱلۡكِتَٰبِ أَنَا۠ ءَاتِيكَ بِهِۦ قَبۡلَ أَن يَرۡتَدَّ إِلَيۡكَ طَرۡفُكَۚ فَلَمَّا رَءَاهُ مُسۡتَقِرًّا عِندَهُۥ قَالَ هَٰذَا مِن فَضۡلِ رَبِّي لِيَبۡلُوَنِيٓ ءَأَشۡكُرُ أَمۡ أَكۡفُرُۖ وَمَن شَكَرَ فَإِنَّمَا يَشۡكُرُ لِنَفۡسِهِۦۖ وَمَن كَفَرَ فَإِنَّ رَبِّي غَنِيّٞ كَرِيمٞ ٤٠
எதைக்கொண்டு பிரார்த்தித்தால் அவன் அங்கீகரிப்பானோ அத்தகைய அல்லாஹ்வின் மகத்தான திருநாமத்தை உள்ளடக்கிய வேத அறிவைப் பெற்றிருந்த, கற்றறிந்த நல்ல மனிதர் ஒருவர், “நான் நீங்கள் கண் இமைப்பதற்குள் நான் அதனைக் கொண்டு வந்துவிடுவேன். அல்லாஹ்விடம் நான் பிரார்த்திப்பதன் மூலம் அவன் அதனைக் கொண்டுவந்துவிடுவான் என்று கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார். அல்லாஹ் அவரது பிரார்த்தனையை அங்கீகரித்தான். அவளது அரியணை தமக்கு முன்னால் நிலைபெற்று இருப்பதைக் கண்ட சுலைமான் கூறினார்: “இது என் இறைவனின் அருளாகும். இதன் மூலம் நான் அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துகிறேனா அல்லது நன்றி கெட்டத்தனமாக நடந்துகொள்கிறேனா என்று அவன் சோதிக்கிறான். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துபவர் நிச்சயமாக அதன் பயனைத் தானே பெறுகிறார். அல்லாஹ் தேவையற்றவன். அடியார்கள் நன்றிசெலுத்துவதால் அவனுக்கு எந்த நன்மையும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. யார் அல்லாஹ்வின் அருள்களை மறுத்து அதற்காக அவனுக்கு நன்றி செலுத்தவில்லையோ நிச்சயமாக என் இறைவன் அடியார்களின் நன்றியைவிட்டும் தேவையற்றவன், கொடையாளன். தனது அருள்களை மறுப்பவனுக்கு அவன் அருள்புரிவதும் அவனது கொடைத்தன்மையே.