Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah An-Naml — Ayah 60

أَمَّنۡ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَأَنزَلَ لَكُم مِّنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَنۢبَتۡنَا بِهِۦ حَدَآئِقَ ذَاتَ بَهۡجَةٖ مَّا كَانَ لَكُمۡ أَن تُنۢبِتُواْ شَجَرَهَآۗ أَءِلَٰهٞ مَّعَ ٱللَّهِۚ بَلۡ هُمۡ قَوۡمٞ يَعۡدِلُونَ ٦٠
அல்லது வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவனா? -மனிதர்களே!- அவன் உங்களுக்காக வானத்திலிருந்து மழையை இறக்கி அதன் மூலம் அழகிய தோட்டங்களை முளைக்கச் செய்கின்றான். உங்களால் அந்த தோட்டங்களிலுள்ள மரங்களை முளைக்கச் செய்ய முடியாது. அல்லாஹ்வே அவற்றை முளைக்கச் செய்தான். அல்லாஹ்வுடன் சேர்ந்து வேறு ஏதாவது தெய்வம் இதனைச் செய்ததா? ஒருபோதும் இல்லை. மாறாக அவர்கள் சத்தியத்தைவிட்டும் நெறிபிறழ்ந்துவிட்டார்கள். அநியாயமாக படைப்பாளனை படைப்பினங்களோடு சமமாக்கிவிட்டார்கள்.