Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah An-Naml — Ayah 61

أَمَّن جَعَلَ ٱلۡأَرۡضَ قَرَارٗا وَجَعَلَ خِلَٰلَهَآ أَنۡهَٰرٗا وَجَعَلَ لَهَا رَوَٰسِيَ وَجَعَلَ بَيۡنَ ٱلۡبَحۡرَيۡنِ حَاجِزًاۗ أَءِلَٰهٞ مَّعَ ٱللَّهِۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ ٦١
பூமி அதிலுள்ளவர்களுடன் சேர்ந்து ஆட்டம் காணாதவாறு உங்களுக்காக அதனை உறுதியானதாக ஆக்கியவன் யார்? அதனுள்ளே அவன் ஆறுகளை ஓடச்செய்தான். உறுதியான மலைகளையும் ஏற்படுத்தினான். இரு கடல்களுக்கிடையே அவன் ஒரு திரையை ஏற்படுத்தினான். ஒன்றின் நீர் உப்பாகவும் மற்றொன்றின் நீர் சுவையானதாகவும் இருக்கிறது. ஒன்றோடொன்று கலந்து கெடுத்துவிடாமல் ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளான். அல்லாஹ்வுடன் சேர்ந்து இதனைச் செய்யும் வேறு ஏதாவது தெய்வம் உண்டா? இல்லை. அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள். அவர்கள் அறிந்திருந்தால் அல்லாஹ்வுக்கு எந்தவொரு படைப்பினத்தையும் இணையாக்கியிருக்கமாட்டார்கள்.