Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah An-Naml — Ayah 62

أَمَّن يُجِيبُ ٱلۡمُضۡطَرَّ إِذَا دَعَاهُ وَيَكۡشِفُ ٱلسُّوٓءَ وَيَجۡعَلُكُمۡ خُلَفَآءَ ٱلۡأَرۡضِۗ أَءِلَٰهٞ مَّعَ ٱللَّهِۚ قَلِيلٗا مَّا تَذَكَّرُونَ ٦٢
துன்பத்திற்குள்ளானவன் தன் துன்பத்தை அகற்றுமாறு பிரார்த்திக்கும்போது அவனுடைய பிரார்த்தனைக்குப் பதிலளிப்பவன் யார்? வறுமை, நோய் மற்றும் மனிதனுக்கு ஏற்படும் ஏனைய சோதனைகளை நீக்கக்கூடியவன் யார்? அவன் பூமியில் உங்களை பரம்பரை பரம்பரையாக பிரதிநிதியாக ஆக்கியவன் யார்? அல்லாஹ்வுடன் சேர்ந்து இதனைச் செய்யும் வேறு ஏதாவது தெய்வம் உண்டா? இல்லை. மாறாக நீங்கள் மிகக் குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள், உபதேசம் பெறுகிறீர்கள்.